அரச அதிபர் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள்
(மன்னார் நிருபர்)
(22-06-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், எவ்வாறு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுத் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என்பது தொடர்பாகவும்,ஆராயும் அவசா கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர்கள்,சுகாதார துறையினர், பொலிஸ்,இராணுவ அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராயப்பட்டது.மேலும் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்கள்,வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்கள் குறிப்பாக வெளி மாவட்டங்களில் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்று கின்றவர்களிடமும் குறித்த தொற்று காணப்பட்டமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கைகளுக்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கான ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டதோடு, நாட்டில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில்,அவர்களை பயண்படுத்தி மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இளைஞர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை வழங்கி அவர்கள் மூலம் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் செயல்பாட்டை மேற்கொள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த செயல்பாட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்தும் ஆராயப்பட்டதோடு,குறித்த செயல் பாட்டிற்கு விரும்பிய , கட்டுக்கோப்புடன் சுகாதார நடை முறைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய இளைஞர், யுவதிகளை தன்னார்வத் தொண்டர்களாக இணைத்துக் கொள்ள எதிர் பார்க்கப்பட்டுள்ளது.எனவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.