கனடாவில் உள்ள ஒரு மெக்டொனால்ட் நிறுவனத்தின் கிளையில் வாகனங்கள் செல்லும் பாதையை தடுத்து அதிருப்தி அறிவித்தை வைத்த பணியாளர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது
தனது வேலையில் மேலதிகாரிகளினால் தரப்பட்ட அழுத்தம் காரணமாக அதிருப்தி அடைந்த ஒரு தொழிலாளியிடமிருந்து மெக்டொனால்ட் கிளையில் வாடிக்கையாளர் வாகனங்களில் வந்து தமது உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் பாதையில் காட்சிப் படுத்தப்பட்ட ஆங்கிலம் மூலமாக அறிவிப்பு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிவேகமாக பரவி வருகின்றது. இதில் வெளிப்படையாக, உணவகத்தின் ஊழியர்களில் ஒருவர் தாம் இந்த கிளையில் வேலை செய்ய விரும்பவில்லை. என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இதைப் பார்த்த முன்னாள் மெக்டோனால்ட்; ஊழியர் ஒருவர் “நான் முன்னர் மெக்டொனால்டு கிளையொன்றில் பணியில் இருந்தபோது என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் இந்த மனநிலையே இருந்தது. இதில் உண்மை இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.