(மன்னார் நிருபர்)
(23-06-2021)
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு இன்றைய தினம் புதன் கிழமை (23) காலை சுமார் 4 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக ஆஹாஸ் கிரீன் எனர்ஜி அமைப்பின் ஊடாக குறித்த உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புதன் கிழமை (23) காலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த அமைப்பின் தலைவர் எஸ்.ராம சுப்பிரமனியன் மற்றும் குறித்த அமைப்பின் முக்கியஸ்தர்களான அஹமட் அல் அலி, முஹமட் யபார், மற்றும் திலங்கா ஹோட்டல் குழுமங்களின் தலைவர் ஜெப் குணவர்த்தன ஆகியோர் இணைந்து தமது சொந்த நிதியில் கொரோனா தொற்று காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் குறைந்த வருமானத்தைக் கொண்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த ஆகியோரும் கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.