இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெனியாய ஹேஸ் தேயிலை பெருந்தோட்டத்தில் மண்சரிவு மழை காற்று என்பவற்றினால் பாதிப்படைந்தது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த 30 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்களை கனடாவில் இயங்கிவரும் ரொறன்ரோ மனித நேயக் குரல் நிறுவனம் பெற்றுக்கொடுத்தது.
இந்த மக்கள் நகரத்துக்கு வருவதாயின் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியாய நகரத்திற்கு அல்லது 26 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எம்பிலிப்பிட்டிய நகரத்திற்கு அல்லது 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இறக்குவானை நகருக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. பயணத் தடை காரணமாக இத்தோட மக்கள் துயரத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கனடாவில் இயங்கிவரும் ரொறன்ரோ மனித நேயக் குரல் நிறுவனம் நிறுவனத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற உலர் உணவு பொதி களுக்கு இம்மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்
மேற்படி உலர் உணவுப் பொருட்கள் பாதிக்கப்பெற்ற மக்களைச் சென்றடைய தெனியாய பிரதேசத்தில் தமிழ்ப் பாடசாலை அதிபராகப் பணியாற்றும் திரு உதயகுமார் தனது குழுவினருடன் மிகுந்த சவால்களுக்கு முகம் கொடுத்து பணியாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவருக்கும் அவரது குழுவினருக்கும் ரொறன்ரோ மனித நேயக் குரல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.