மன்னார் நிருபர்
(24-06-2021)
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவல் அரண் பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டு நேற்று (23) மாலை 5 மணியளவில் மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் இலகு தன்மையை அடிப்படையாக கொண்டு நாடு முழுவது 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்திருந்த நிலையில் மன்னார் உயிலங்குளம் காவலரண் பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரத்தின மற்றும் மன்னார் சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீர சிங்க ஆகியோர் இணைந்து வைபவரீதியாக பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தனர்.
அதே நேரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.