ஒன்ராறியோவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 வீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இப்போது முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது!
ஜூன் 23ஆம் திகதி முதல், கடந்த மே 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எம்.ஆர்.என்.ஏ. முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களும், கோவிட்-19 டெல்டா திரிபு தொற்றின் ஆபத்துள்ள குறிப்பிட்ட 10 பகுதிகளில் (டூறம், ஹோல்டன், ஹமில்டன், பீல், போர்கிபைன், சிம்கோ-மஸ்கோகா, ரொறன்ரோ, வோட்டலூ, வெலிங்டன்-டஃப்றின்-கல்ஃப், யோர்க் பொது சுகாதார அலகு) வாழ்பவர்களும் இப்போது தமக்கான இரண்டாவது தடுப்பூசியினை குறுகிய காலத்தில் முன்பதிவு செய்துகொள்ளவும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட தமது திகதியை முன்னகர்த்துவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தடுப்பூசியைப் பெறுவதற்கு நீங்கள் ontario.ca/bookvaccine எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அனைவரும் இலகுவான முறையில் கோவிட்-19 தடுப்பூசி மையங்களுக்குச் சென்றுவருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஒன்ராறியோ அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தடுப்பூசி நிலையங்களுக்கு சென்றுவர முடியாத நிலையிலுள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஒன்ராறியோ சமூக உதவி அமைப்பினூடாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கென ஒன்ராறியோ அரசாங்கம் 3.7 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
தடுப்பூசி பெற விரும்பும் ஒருவர் போக்குவரத்து உதவியினைப் பெறுவதற்குத் தகுதியுடையவரானால், அவர் தடுப்பூசி நிலைய ஊழியர்கள் மற்றும் தன்னார்வல வாகன ஓட்டுனர்கள் ஊடாக தனக்கான போக்குவரத்து வசதிகளை செய்துகொள்ள முடியும். இவ்வேற்பாட்டினை, முதலாவது தடுப்பூசியினை அல்லது இராண்டாவது தடுப்பூசியினைப் பெற செல்பவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.