(மன்னார் நிருபர்)
(25-06-2021)
தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த இரு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து வீதித் தடைகளை அமைத்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கிராமங்களில் இருந்து வெளி இடங்களுக்கும், வெளி இடங்களில் இருந்து குறித்த கிராமங்களுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறை அதிகாரிகள் குறித்த கிராமங்களுக்கு சென்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.