ஸ்காபுறோவில் Scarborough Health Network என்ற பெயரோடு இயங்கும் வைத்தியசாலைகளுக்கான நிதிசேகரிக்கும் முயற்சியாக கடந்த வாரம் நடத்தப்பெற்ற ரேடியோதோன் நிகழ்ச்சியின் மூலம் 275,000 டாலர்கள் சேகரிக்கப்பெற்றன என்பதை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ஸ்காபுறோவில் வெற்றிகரமாக இயங்கிவரும் East FM 102.7 பண்பலை வானொலியின் ஊடாக நடத்தப்பெற்ற மேற்படி ரேடியோதோன் நிகழ்ச்சிக்கு சில வர்த்தக அன்பர்கள் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.
இங்கே காணப்படும் படத்தில் ரேடியோதோன் நிகழ்ச்சியின் மூலம் சேகரிக்கப்பெற்ற 275,000 கனடிய டாலர்கள் தொகைக்கான மாதிரிக் காசோலையை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் திரு சாந்தா பஞ்சலிங்கமும், FM 102.7 பண்பலை வானொலியின் சார்பாக அதன் தலைவர் திரு நடா ராஜ்குமாரும் வைத்தியசாலையின் பிரதிநிதி திருமதி கிறிஸ்ணியிடம் கையளிப்பதைக் காணலாம்.