எத்தனையோ ஆண்டுகள் தொடர்ச்சியாக அவுஸ்த்திரேலியாவின் விம்பில்டன் ரெனில் சுற்றுப்போட்டியிலும் ஏனைய பல உலகப் போட்டிகளிலும் வெற்றி வீராங்கனையாக பிரகாசித்த அமெரிக்காவின் ரெனிஸ் வீராங்கனை அண்மையில் கண்ணீர் விட்டு அழுதபடி ஆட்டக் களத்தை விட்டு வெளியேறியது அவரது ரசிகர்களையும் ஏன்? அமெரிக்காவின் ஒட்டு மொத்த மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021 விம்பிள்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டமொன்றில் பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொண்டார்
ஆட்டத்தின் இடையே செரீனாவின் கால் சறுக்கியதால், இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார் அவர்.
சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் ஆட்டம் இருந்த நிலையில் வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் செரீனா.
இதனால் நடப்பு விம்பள்டன் தொடரின் முதல் சுற்றில் கண்ணீர் உணர்வுடன் செரீனா, சாஸ்னோவிச்சுடன் கைகுலுக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் செரீனா.
இதன் மூலம் 8 ஆவது முறையாக விம்பிள்டன் மற்றும் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதற்கான செரீனாவின் கனவும் கலைந்தது.