(சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் – லண்டன்)
உலகளவில் பௌத்தர்களின் ஒரு முன்னணி ஆன்மீகத் தலைவராக மதிக்கப்படும் தலாய் லாமா டச்சு தொலைக்காட்சி நிறுவனமான என் ஓ எஸ்ஸுகு அளித்த பேட்டி ஒன்றில் மிக முக்கியமான விஷயம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.
பௌத்தம் மற்றும் புத்தர் குறித்த பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் டச்சு மக்கள் மிகவும் ரசிக்கும் பாலியல் விஷயங்கள் தொடர்பான கேள்விகளும் இருந்தன. ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று வந்தவர்களுக்கு அங்குள்ள கலாச்சாரம் மற்றும் `இதர விஷயங்கள்` தெரிந்திருக்கும்.
ஆனால் தலாய் லாமா பேசியதோ அல்லது அவரிடம் கேட்கப்பட்டதோ இந்த ஆம்ஸ்டர்டாம் விஷயமில்லை. அவரிடம் பாலியல் தொடர்பில் புத்தர் கூறியுள்ளது பற்றி கேட்கப்பட்டது.
“பௌத்தத்தை பின்பற்றும் பல நாடுகளில் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. பாலியல் இச்சைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறதே“?
“ பாலியல் துஷ்பிரயோகங்கள், சீண்டல்கள் அல்லது பலாத்காரங்களைச் செய்வோர் புத்தரின் உபதேசங்களை மதிப்பதில்லை அல்லது அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றே கருத வேண்டும். மேலும் புத்தரின் உபதேசங்கள் மற்றும் பௌத்த கோட்பாடுகளின் படி எவ்வகையிலும் பாலியல் சேட்டைகள், துன்புறுத்தல்கள், சுரண்டல்கள் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்“
என் ஓ எஸ் தொலைக்காட்சியின் இந்த கேள்விக்கு பல காரணங்கள் உள்ளன. பௌத்தத்தை பின்பற்றும் பல நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி எழுந்தன. குறிப்பாக பர்மா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் இராணுவத்தினர் பாலியல் வன்முறை அல்லது துஷ்பிரயோகத்தை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி வந்தனர்.
இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. இறுதிக்கட்ட போரின் போதும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற சம்பவங்களும் உலகறிந்தவை. இசைப்பிரியா………
தலாய் லாமா கூறியதை ஆட்சியாளர் ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்தக் கட்டுரை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதற்கில்லை.
Media Ministry will not launch investigation on sexual harassment in media institutions: Keheliya https://t.co/KnS0UMzCEQ
— The Morning (@TheMorningLK) June 29, 2021
பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழும் போது பெரும்பாலான நாடுகளும் அமைப்புகளும் அதை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும் அல்லது எடுப்பதாக வாக்குறுதியாவது அளிக்கும். இந்தியா போன்ற நாடுகள் பாலியல் பலாத்காரங்களை செய்பவர்களை தண்டிக்க புதிய சட்டத்தையே இயற்றியது. இதுவொன்றும் புதிதல்ல.
ஆனால் இலங்கையோ இது குறித்து கவலைப்படுவதாகவோ அல்லது கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. இப்போது தொடர்ச்சியாக பல ஊடகவியலாளர்கள் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதை தைரியமாகக் கூற முன்வந்துள்ளனர். நாட்டின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது இலங்கையில் ஊடக சுதந்திரம் குறித்த பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆர் எஸ் எஃப் உலகளவிலான ஊடக சுதந்திரப் பட்டியலில் இலங்கையை மிகவும் கீழே வைத்துள்ளது. அது இப்போது மேலும் வீழ்ச்சியடையும்.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தினர் இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.
ஆனால் இலங்கை அரசோ இது குறித்து விசாரணை நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறியது ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருந்தது. அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறிய காரணம் விசித்திரமானது.
“இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. அப்படி அளித்தல் அது குறித்து விசாரிப்பது பரிசீலிக்கப்படும்“
இது தனியொருவர் வைத்த குற்றச்சாட்டு அல்ல, பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் கூறியுள்ளனர். இப்படியான தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்தவுடன், அரசு தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். அதுவே முறை, தர்மம். ஆனால் ஆதாரத்துடன் புகாரளித்தால் நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறியிருப்பது வெட்கக் கேடானது. அதாவது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆதாரமும் அதிகாரபூர்வமான புகாரையும் அரசு கோருகிறது.
அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வளர்ந்த பிள்ளைகள் இருக்கக் கூடும். அவ்வகையில் தமது பிள்ளைகளை எப்படி பாதுகாப்பார்களோ அப்படி நாட்டிலுள்ள இளையோர்களை தமது மகன் அல்லது மகள் போன்று கவனிக்க வேண்டும் ராஜ நீதி.
இலங்கையில் நாளாந்த பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் தான், தொழில்முறை சக ஆண் ஊழியரால் பாலியல் பலாத்காரத்திற்குஆளாகநேரிடும்என்றுஅச்சுறுத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சாரா கெல்லபத ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
🧵 I used to work at a daily newspaper from 2010 to mid-2017. Seeing a few tweets from women, some who’ve been in Sri Lankan media speaking out about their experiences of harassment from their male colleagues, has really taken me back to some uncomfortable experiences back then.
— Sarah Kellapatha (@saararrr) June 18, 2021
முன்னாள் அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டைன் செய்த பாலியல் குற்றங்களின் வெளிப்பாட்டுடன் 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய #MeToo பிரச்சாரத்தைப் போலவே, சாரா கெல்லபத ட்விட்டர் பதிவு, இலங்கையில் மேலும் பல பெண்களை தங்கள் அனுபவங்களை பகிரங்கப்படுத்தத் தூண்டியுள்ளது.
இதற்கமைய இதுவரை, பல பெண்கள் பணியிடங்களில் எதிர்நோக்கிய பாலில் தொல்லைகள் குறித்த பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.
2010-17 ஆம் ஆண்டுகளில் ஒரு பத்திரிகையில் பணியாற்றியபோது தான் அனுபவித்த துன்புறுத்தல் குறித்து சாரா வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையின் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவர தொடங்கியுள்ளன.
இந்த ட்வீட்டைத் தொடர்ந்து, இலங்கையில் ஊடக நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்ற அமெரிக்க ஊடகவியலாளர் ஜோர்டான் நரின், இலங்கை அரசின், ”டெய்லி நியூஸ்” பத்திரிகையில் பயிற்சி பெற்றபோது சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரால் தான் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக ட்வீட் செய்துள்ளார்.
“இலங்கை இதுவரை கண்டிராத சிறந்த ஊடகவியலாளர் அவர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை நான் பொறுமையாகஇருந்தேன். ஆனால் அவர் சுமார் இரண்டு மாதங்கள் என்னைப் பயன்படுத்திக் கொண்டார், பின்னர் அவர் என்னைநோக்கிகூச்சலிடஆரம்பித்தார். தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்தார், எப்போதும் என்னைத் தொடுவார். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில்அவர் தலைமை ஆசிரியரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த ஊடகவியலாளர்பதவிவிலகும்நிலைஏற்பட்டது.
பின்னர் அவர் டெய்லி மிரரில் இணைந்தார், இப்போது அவர் சட்டம் பயின்று வருவதாக, சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள, ஊடகவியலாளர் சஹ்லா இல்ஹாம், இப்போது வெளியாகாத “பிரபல பத்திரிகை ஆசிரியர்” ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், தன்னை அமைதியாக இருக்குமாறு, தனது குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்தை விவரிக்கும் மற்றொரு ஊடகவியலாளர் காவிந்தியா தென்னகோன், தான் 15 வயது மாணவியாக சுயாதீன தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பற்கேற்றபோது ஒரு ஒப்பனை கலைஞர் தன்னை தேவையில்லாமல் தொட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி பணிப்பாளரிடம் முறைப்பாடு அளித்த பின்னர், கலைஞர் தன்னை நெருங்குவதை தவிர்த்துகொண்டதாகவும், எனினும் அவர் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLanka: Statement from the Foreign Correspondents’ Association on the recent allegations of sexual harassment in newsrooms 👇🏾#lka#MeToo #Timesup pic.twitter.com/RvBhXaaBm7
— Meera Srinivasan (@Meerasrini) June 22, 2021
அதன் பின்னர் எம்டிவி தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றியபோது, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தன்னை முத்தமிடும்படி கட்டாயப்படுத்த முயன்றது குறித்தும், அதன் பின்னர் பல மாதங்கள் தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் குறித்தும் அவர் கூறியிருந்தார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் நடுத்தர வர்க்க ஊடகவியலாளர்களும், பின்னர் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் அடங்குவர்.
பலர்தாங்கள்எதிர்கொண்டநெருக்கடிகள்குறித்துதெரிவித்ததைஅடுத்து, இலங்கையின் வெளிநாட்டு ஊடகவியலலாளர்களள் சங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டுமெனவும், மீண்டும் இவ்வாறு ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஊடகங்களையும் கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டிருந்தது.
”ஒரு சமூகம் என்ற வகையில், பணியிடங்களில் உள்ள எங்கள் சக ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் சமத்துவம் இருப்பதை உறுதிசெய்வதற்கான பொறுப்பு எங்களுக்கு காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.”
இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சில சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடக நிறுவனங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் காணப்பட்டதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை நிறுத்துமாறு, ஊடக நிறுவனத் தலைவர்களை அறிவுறுத்துமாறு, ஜுன் 25ஆம் திகதி அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில், இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சில ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், அலுவலகத்திற்கு வெளியே பணிபுரியும் ஊடகவியலாளர்கள் (பிராந்திய ஊடகவியலாளர்கள்), ஊடகங்களின் பிற பிரிவுகளில் பணிபுரியும் பெண்கள் மாத்திரமன்றி, ஊடகங்களில் சில ஊடகவியலாளர்களால் மாத்திரமன்றி, ஆசிரியர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களாலும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பாதிப்பிற்குள்ளான ஊடகவியலாளர்கள் மற்றும் பிற ஊடகவியலாளர் குழுவினால் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த ஆதாரங்களையும், சில தகவல்களையும் நிறுவனத் தலைவர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் பெரும்பாலான சம்பவங்கள் நிறுவனத் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் தலாய்லாமா கூறியதற்கு வருகிறேன். இப்படியான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் புத்தபகவானையும் பௌத்ததையும் பின் பற்றுபவர்கள். அவர்கள் தமது ஊடகதர்மத்தை கடைபிடித்து நடக்கிறார்களோ இல்லையோ குறைந்தபட்சம் அவர்கள் பின் பற்றும் மதத்தையும் அதைத்தோற்று வித்தவர் கூறிய கருத்துக்களையும் ஏற்றுமதித்து நடக்க வேண்டும்.
“பாலியல் துஷ்பிரயோகத்தை பௌத்தத்தில் தடை செய்யப்பட்டுள்ளது“ என்று தலாய் லாமா கூறியதை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.