நீங்கள் நினைத்தவுடன் குற்றவாளிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதென்றால் சட்டம் மற்றும் நீதிபதிகள் எதற்கு இருக்கின்றார்கள்? உங்களின் இந்த தீர்மானத்தினால் இன்று எங்கள் தாய் நாட்டிற்கு சட்டம் ஒன்று இல்லாமல் போயுள்ளது. இன்று நாட்டை ஆட்சி செய்யும் நீங்கள் ஜனாதிபதி என்ற தளத்தில் இல்லை என்பதை நாமும் உலகமும் ஏற்றுக்கொள்கின்றோம்.
இவ்வாறு, தனது தந்தை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர, ஜனாதிபதிக்கு கோட்டாபாயவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
பொசொன் போயா தினத்தன்று மரண தண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
“ஒரு நாடு ஒரு சட்டம் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள். அந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் சில தற்போது உறுதியாகியுள்ளது.
நான் வணங்கும் பௌத்த மதத்திற்கு ஏற்ப நான் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்கி விட்டேன். எனினும் உங்களுக்கு புதிதாக பிறந்த பேரக்குழந்தை எதிர்காலத்தில் உங்கள் தொடர்பில் பெருமையாக பேசுவதற்கு என்ன விடயத்தை மீதமாக வைத்துள்ளீர்கள்?
மேற்படி கடிதத்தில் தனது தந்தை, தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக பல அர்ப்பணிப்புகளை செய்ததுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக அர்ப்பணிப்புகளை செய்த ஒருவர் என்பதனை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்” என்றும் கோட்டாபாயவிற்கு எழுதிய கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது