இலங்கையில் நீண்ட காலப் பிரச்சனைகளில் ஒன்றாக மொழிப் பிரச்சினை என்பது இலங்கையில் மொ ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் அரச கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தாலும், அந்த நிலையை அடைவதற்கு நீண்ட காலம் போராட வேண்டியிருந்ததை அனைவரும் அறிவர். மொழிப் பிரச்சினையால் இரண்டு பகுதியினர் இலாபம் அடைந்தனர். ஒரு தரப்பினர் சிங்கள இனவாத அரசியல்வாதிகள்.
மறு தரப்பினர் தமிழ் இனவாத அரசியல்வாதிகள். அதிலும் தமிழ் இனவாத அரசியல்வாதிகளே கூடுதலான இலாபம் தமிழரசுக் கட்சியினர் மொழிப் பிரச்சினையை வைத்தே தமது கட்சியை வளர்த்துக் கொண்டனர் எனவும் கூறலாம்.ஆனால் இன்று வரை எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கும் தமிழ் மக்கள் இந்த இரு கட்சிகளினதும் ஏமாற்றுத் தனத்தைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் அவர்களுக்கு ஆதரவளித்து வருவதுதான் மிகப்பெரிய சோகம்.
இலங்கையில் மொழிப் பிரச்சினையைத் தொடக்கி வைத்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அபகீர்த்திமிக்க தலைவர்களில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தான். அவர் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பிரித்தானியர் அமைத்திருந்த சட்டசபையில் ஒரு உறுப்பினராக இருந்த காலத்திலேயே இலங்கையின் ஆட்சி மொழியாகவும், பாடசாலைகளில் போதனா மொழியாகவும் சிங்களம் மட்டுமே இருக்க வேண்டும் என்றொரு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார்.
அன்றைய காலகட்டத்தில் இனவாதம் பெரிதாக மேலோங்கி இருக்காத காரணத்தால் அதிர்ஸ்ட்டவசமாக அவரது தீர்மானம் தோற்றுப்போனது. சுப்பராயன் பின்னர் 1956 பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் முன்னதாக ஐ.தே.க. களனியில் நடத்திய மாநாட்டில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாக இருக்கும் என்றொரு தீர்மானத்தை அதே ஜே.ஆரே முன்மொழிந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இதிலிருந்து ஓர் உண்மை புலனாகின்றது. அதாவது, பண்டாரநாயக்க 1956இல் ஆட்சிக்கு வந்து ‘தனிச் சிங்களம்’ சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அவர் ஆட்சிக்கு வராமல் ஐ.தே.க. ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனிச் சிங்களச் சட்டம் வந்திருக்கும். அதுமட்டுமல்ல, பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது ஐ.தே.க. அதை ஆதரித்தே வாக்களித்தது. இதிலிருந்து மொழிப் பிரச்சினையில் ஐ.தே.கவின் கொள்கை என்னவென்பது தெட்டத்தெளிவாகிறது.
தனிச் சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் அதை வன்மையாகக் கண்டித்ததுடன், எதிர்த்தும் வாக்களித்தன. தனிச் சிங்களச் சட்டம் சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்வினையை கட்சியின் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பொன்.கந்தையா தனது நீண்ட உரையின் மூலம் தெரியப்படுத்தினார்.
அதேபோல, “ஒரு மொழி என்றால் நாடு இரண்டாகும். இருமொழி என்றால் நாடு ஒன்றாகும்” எனத் தெரிவித்து மொழிப் பிரச்சினையில் லங்கா சமசமாஜக் கட்சியின் கொள்கையை அதன் தலைவர்களில் ஒருவரான டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா தெளிவுபடுத்தினார். (பிற்காலத்தில் கொல்வினதும் அவரது சமசமாஜக் கட்சியினதும் கொள்கை மாறிவிட்டது உண்மையே) தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்திருந்தபோதிலும், அவர்களது தமிழ்மொழிப்பற்று அந்தரங்க சுத்தியானதா என்று ஐயப்பாடு இருக்கின்றது.
9ம் பக்கத்தொடர்ச்சி 9ம் பக்கத்தொடர்ச்சி… ஏனெனில், பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தை கொண்டுவந்தபோது, சிங்களத்துடன் தமிழையும் ஆட்சிமொழியாக்கும்படி இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தின. வலியுறுத்தியதுடன் நின்றுவிடாது, தமிழையும் ஆட்சி மொழியாக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி இயக்கமொன்றை மக்கள் மத்தியில் ஆரம்பிக்க முனைந்தது.
அதன் பொருட்டு யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தில் கூட்டமொன்றைக் கூட்டி இதர அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்புக்கு பதிலளித்த தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், ‘ஆங்கிலமே தொடர்ந்தும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’ என்பதே தனது கட்சியின் கொள்கை என்பதால், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என மறுத்துவிட்டார்.
பொன்னம்பலத்தின் முடிவை அறிந்த தமிழரசுக் கட்சியினர், ‘தமிழ் காங்கிரஸ் கலந்து கொண்டால் மட்டுமே நாமும் கலந்து கொள்வோம்’ எனத் தெரிவித்து அவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். இப்படிச் சொன்ன இந்த இரு தமிழ் கட்சியினரும்தான், வெளியே ‘ஐயோ சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் பறிபோகிறது’ எனக் கூச்சல் போட்டு தமிழ் மக்களிடம் தொடர்ந்தும் வாக்கு வேட்டையாடி வந்துள்ளனர்.
நன்றி- வானவில்