கனடாவின் ரொறன்ரோ பெரு நகரில் இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்கிழமையும் கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுற்றுச் சூழல் மற்றும் கால நிலை அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான Environment Canada இந்த வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது
31பாகை சி முதல் 34 பாகை சி வரையிலான அதிகபட்ச பகல்நேர வெப்பநிலையுடன் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் 40 பாகை சியை நெருங்கும் அளவிற்கு மனித உடல்களக்கு பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது எனவும் Environment Canada இந்த வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது ஆனாலும் இரவு நேரங்களில் வெப்பநிலை 21 சி முதல் 25 சி வரை இருக்கலாம், இது வெப்பத்திலிருந்து மக்களை சிறிது காப்பாற்றும் என்றும் மேற்படி கிணைக்களம் தெரிவித்துள்ளது
“வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்று மோசமடைந்து வீசும் காற்றின் தரமும் வேகமும் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் மேலும் காற்றின் தரத்தை பொருத்த சுகாதார குறியீடானது அதிக ஆபத்திற்கான அறிகுறியைக் கொண்டது என்றும் Environment Canada எச்சரிக்கையை விடுத்துள்ளது
குழந்தைகள் மற்றும் நோய்களுக்குள்ளாகியவர் மற்றும் முதியவர்கள் ஆகியோர் வீட்டிற்குள் இருக்கவும் எனவும் குளிர்ந்த பானங்களை அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை இவ்வாறான வெப்ப அபாயம் குறைந்து சென்று சாதாரண கால நிலையை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, மழை மற்றும் இடியுடன் கூடிய மழை கால நிலையானது புதன்கிழமை நிலவும் என்றும் அன்று வெப்பநிலை கணிசமான வீழ்ச்சிக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் தரும் நாளாக அமையும் என்றும் Environment Canada அறிவித்துள்ளது