(மன்னார் நிருபர்)
(06-07-2021)
ஜனாதிபதியின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட ‘சௌபாக்கியா வேளைத்திட்டத்தின்’ கீழ் மன்னார் பிரதேச செயலக பிரிவில் அரசாங்கத்தின் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் பயனாளர்களின் பங்களிப்பிலும் அமைக்கப்பட்ட வீடு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (6) காலை 11.30 மணியளவில் வைபவ ரீதியாக உரிய குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் சாந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டை அதன் உரிமையாளருக்கு கையளிக்கும் நிகழ்வு மன்னார் நகர் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன், மன்னார் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.அலியார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், சாந்திபுரம் சமுர்த்தி உத்தியோகஸ்தர், கிராம அலுவலகர்; ,அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என பலரும் கலந்து கொண்டு உரிய குடும்பத்திற்கு குறித்த வீட்டை கையளித்தனர்.
குறித்த நிகழ்வில் சமுர்த்தி ‘சிப்தொர’ திட்டத்தின் கீழ் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களுக்கான 10 மாதங்களுக்கு தேவையான கல்வி ஊக்குவிப்பு தொகையும் சுய தொழில் முனைவேர் இருவருக்கு கடல் தொழில் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு என தல ஒரு இலட்சம் ரூபாய் வாழ்வாதார நிதி உதவியும் வழங்கி வைக்கப்படமையும். குறிப்பிடதக்கது.