(மன்னார் நிருபர்)
(6-07-2021)
மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.
மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் தடுப்பூசி 2 ஆவது நாளாகவும் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
-இதே வேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.