(மன்னார் நிருபர்)
(08-07-2021)
பொது ஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவி யேற்றதையடுத்து மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை (8) காலை கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
பொது ஜன பெரமுன கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து பசில் ராஜபக்ஸ மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆதரவாளர்கள் பதாதைகளை காட்சிபடுத்தியதுடன் வெடி கொழுத்தியும் இனிப்புக்கள் பரிமாறியும் கொண்டாடியுள்ளனர்.
இதே வேளை நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பொது ஜன பெரமுன கட்சியினர் வெடி கொளுத்தி தமது மகிழ்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (8) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவி ஏற்றதுடன் அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.