(மன்னார் நிருபர்)
(08-07-2021)
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் சிந்தனையில் ஸ்தாபிக்கப்பட்ட ‘அடைக்கலம் அறக்கட்டளை’ யின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (8) மதியம் மன்னார் டெலோ அலுவலகத்தில் இடம் பெற்றது.
-இதன் போது பின் தங்கிய குடும்பங்களில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு மாதந்தம் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஊக்கு விப்பு தொகை வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் வைபவ ரீதியாக வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந் தலைமையில் இடம் பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வில் தமிமீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்ராஜ் கலந்து கொண்டார்.
இதன் போது முதல் கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு ஊக்கு விப்பு பணம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களின் மிகவும் பின் தங்கிய குடும்பம் மற்றும் பெற்றோரை இழந்த மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு குறித்த ஊக்கு விப்பு தொகை மாத மாதம் வழங்கப்படும் என குறித்த அறக்கட்டளையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.