மன்னார் நிருபர்
(8-07-2021)
இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்றைய தினம் வியாழக்கிழமை( 8) காலை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி பிரமாணம் செய்துக் கொண்டார். அவருக்கு முன்னர் இந்தப் பதவியை வகித்து வந்தவர் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபாய அலுவலகத்தில் நிதி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அங்கு கோட்டாபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் கூட்டாக நின்று எடுத்துக்கொண்ட படத்தைப் பார்த்து முகநூல்களில் தமிழ் பேசும் அன்பர்கள் அவர்களை ‘மும்மூர்த்திகள்’ என்று வர்ணித்து, இந்த மூவரால் நாடு மூழ்கப்போகின்றதா? அன்றி எழுந்து நிற்கப் போகின்றதாக? என்ற கேள்விகளையும் பதிவிட்டுள்ளனர்.