ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
பொறுப்புகளும், சிறப்புகளும் சேரக்கூடிய சீரான வாரம். தனவரவு பெருகும். புதிய முதல்களைத் தவிர்க்கவும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நல்லோர் நட்பு கிட்டும். திறமைகள் வெளிப்படும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். காதலில் பிரிவு ஏற்படும். பாராட்டுக்கள் தேடிவரும். கல்விக் கடன் ஏற்படும். கடமையில் தடங்கல் ஏற்படும். விவாத முயற்சி வெற்றி தரும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: வீரவிநாயகர்
அதிர்ஷ்ட எண் – 8, 2, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – கருப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, D;
ரிஷபம் :
நலமும் வளமும் நாடி வரக்கூடிய நன்மையான வாரம். யோகமான நாள். உணவுத் தொழில் உயர்வு தரும். புதிய எண்ணங்கள் அதிகமாகும். பங்குச் சந்தை தொழில் லாபம் தரும். மன அமைதி நிலவும். மனதில் அளவில்லா சந்தோஷம் உண்டாகும். மனைவி அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட வேண்டும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சீரான வாழ்வமையும். சிந்தனைகள் மேலோங்கும். அம்பிகை வழிபாடு ஆரோக்கியம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: வடிவுடை அம்மன்
அதிர்ஷ்ட எண் – 5, 1, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – சில்வர் கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, J
மிதுனம் :
நேர்மையான உள்ளங்களுக்கு மேன்மையான வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடிய வாரம். காரிய வெற்றி கிட்டும் நாளாக அமையும். பதவி வாய்ப்பு வரும். வாதகம் விலகும். வருமானம் கை கூடிவரும். நண்பர்களால் நன்மை உண்டு. பெற்றோர் உதவிகள் கிடைக்கும். பிறர்க்கு உதவி செய்வதால் நன்மை உண்டாகும். உறவினரால் முன்னேற்றம் உண்டு. கட்டிடத் தொழில் லாபம் தரும். பொன்னான நேரங்களாக அமையும். எள்தானம் ஏற்றம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: கருமாரி அம்மன்;
அதிர்ஷ்ட எண் – 5, 3, 1, 9 அதிர்ஷ்ட நிறம் –சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – T, M.
கடகம் :
நன்மையான விஷயங்களை உண்மையாக சந்திக்கக்கூடிய நல்ல வாரம். சாதனை படைக்கும் நாள். நிர்வாகம் செலவுகள் கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். பொதுப்பிரச்சனைகள் விலகும். உடல் உஷ்ணம் வந்து போகும். அச்சுத் தொழில் ஆதாயம் தரும். உடன் பிறப்புகளால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். மாருதி வழிபாடு மகிழ்ச்சியைத் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண் – 9, 3, 2, 7; அதிர்ஷ்ட நிறம் – வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S, R;
சிம்மம் :
பொன்னும், பொருளும் சேரக்கக்கூடிய பொன்னான வாரம். நன்மைகள் பெருகும் நாள். கால்நடைகளால் பலன் உண்டு. காதலில் மோதல் உண்டு. பாராட்டு பெருகும். உணவு பிரியம் அதிகரிக்கும். ஆதலால் கவனம் தேவை. புதிய தொழில் அமையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வீண் விரயம் அதிகமாகும். பெருமைகள் கூடும். திறமைகள் அதிகமாகும்.
அரசியலில் புகழ் கூடும். வீண் பழி அகலும். மன சஞ்சலம் மறையும்.
வழிபடவேண்டியதெய்வம்: காளிதுர்க்காதேவி
அதிர்ஷ்ட எண் – 4, 1, 7, 8; அதிர்ஷ்ட நிறம் – காவிநிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – L, J.
கன்னி :
தடைகளுக்கு விடை கிடைக்கக் கூடிய நல்ல வாரம்.. காதல் பிரிவை ஏற்படுத்தும். வீண் குழப்பங்கள் வந்து போகும். உடல் நலம் மேம்படும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். புதிய முயற்சிகள் கை கூடும். நண்பர்கள் உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டு. அயல் நாட்டுப் பயணம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். பித்ருக்கள் சாபம் நீங்கும். மங்களச் செய்தி வரும்.
வழிபடவேண்டியதெய்வம்: மாங்கல்யேஷ்வரர்
அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 3; அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, V;
துலாம் :
கனத்த இதயத்தில் வலுத்த பலன் கிடைக்கக்கூடிய நல்ல வாரம். சோதனைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உடல் நலம் திருப்தி தரும். மன அமைதி குறையும். திருமண வாய்ப்பு கூடும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். பொறியியல் துறை லாபம் தரும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கும். உழைப்பில் கவனம் தேவை. வீண் செலவுகள் அதிகரிக்கும்.
வழிபடவேண்டியதெய்வம்: அக்னிலிங்கப்பெருமாள்
அதிர்ஷ்ட எண் – 5, 7, 9, 0; அதிர்ஷ்ட நிறம் – முட்செவ்வந்தி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S, U;
விருச்சிகம் :
இறைவனின் கருணை இல்லத்தில் நிரம்பக் கூடிய அற்புதமான வாரம். சுய விடு வாங்க முயற்சி செய்யலாம். மங்களமான நாள். அரசு வாய்ப்பு தடைப்படும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். கலைத்துறையில் முன்னேற்றம் கொடுக்கும். பயணம் அனுகூலம் தரும். திருமண முயற்சி வெற்றி தரும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். தோற்றப் பொலிவு கூடும். நல்லவர் நட்பு கிட்டும். எதிரிகள் பலம் குறையும். பிரார்த்தனையால் பலன் உண்டு.
வழிபடவேண்டியதெய்வம்: பட்டத்தரசியம்மன்
அதிர்ஷ்ட எண் – 9, 4, 3, 1; அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – K, Z;
தனுசு :
ஆலய தரிசனத்தால் ஆத்மபலம் பெருகக்கூடிய அற்புதமான வாரம். வெளிநாட்டுப் பயணம் உண்டு, கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். முன் கோபம் தவிர்க்கவும். பயணம் பலன் தரும். புதிய முயற்சியில் கவனம் தேவை. மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். வர்த்தக தொழில் லாபம் தரும். பதவி உயர்வு தடைப்படும். பொருளாதார சிக்கல் நீடிக்கும். சிரமங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களால் பாராட்டு பெறுவீர்கள்.
வழிபடவேண்டியதெய்வம்: ஹோரம்ப கணபதி
அதிர்ஷ்ட எண் – 3, 8, 2, 9; அதிர்ஷ்ட நிறம் – காவி நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – L, X;
மகரம் :
புதியபாதையில் அடியெடுத்துவைக்கக்கூடிய அற்புதமான வாரம். புதிய வாய்ப்புக்கள் உருவாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பெருமைகள் சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பணத் தேவை அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். புகழ் கூடும். அந்தஸ்து உயரும். உறவினர் ஒற்றுமை ஏற்படும். பொறுப்புகள் சிறப்பு சேர்க்கும். தனவரவு உண்டு. மனகசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புக்கள் உருவாகும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஜலகண்டேஸ்வரர்
அதிர்ஷ்ட எண் – 8, 2, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – கருப்பு (கருமை), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, D;
கும்பம் :
சினமும், குணமும் சீராக அமையக்கூடிய சிறப்பான வாரம். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். சொத்து சேர்க்கை உண்டு. உழைப்பில் கவனம் தேவை. கோரிக்கை நிறைவேறும். மனை வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார வளம் மேம்படும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: தேவி செல்வநாயகி
அதிர்ஷ்ட எண் – 1, 8, 2, 5; அதிர்ஷ்ட நிறம் – ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – N, A;
மீனம் :
தடைகளுக்கு விடைகிடைக்கக் கூடிய நல்ல வாரம். காதல் பிரிவை ஏற்படுத்தும். வீண் குழப்பங்கள் வந்து போகும். உடல் நலம் மேம்படும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். புதிய முயற்சிகள் கை கூடும். நண்பர்கள் உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டு. அயல் நாட்டுப் பயணம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். பித்ருக்கள் சாபம் நீங்கும். மங்களச் செய்தி வரும்.
வழிபடவேண்டிய தெய்வம்: மாங்கல்யேஷ்வரர்
அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 3; அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, V;