கனடாவின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் அரசாங்கத்தின் முன்னாள் நீதி அமைச்சருமான ஜோடி வில்சன்-ரெய்போல்ட் நேற்று வியாழக்கிழமை ஒரு பகிரங்க அறிவிப்பை விடுத்ததார். அதில் தான் அடுத்த பொதுத் தெர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அத்துடன் கடியப் பாராளுமன்றம் என்பது மோசமான பின்னணியில் இருந்து தனிநபர்களை ஓரங்கட்டும்” நச்சுத்தன்மையும் பயனற்ற தீர்மானங்களை எடுக்கும் ஒரு தளம் என்றும் அவர் கனடியப் பாராளுமன்றத்தை விமர்சனம் செய்தார்
வில்சன்-ரெய்போல்ட் அவர்கள் தனது தொகுதியான வான்கூவர்-கிரான்வில் தொகுதி மக்களுக்கு என எழுதிய கடிதத்தில், 2015 ஆம் ஆண்டில் லிபரல் பதாகையின் கீழ் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பாராளுமன்றத்தில் தனதுஅரசியல் பயணத்தின் ஒரு ஆபத்தான கட்டத்தைத் தாண்டியதாகவும் தற்போது பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்து பல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். .
என்னைப் பொறுத்தளவில் மத்திய பாராளுமன்ற அரசியல், என்பது கணிசமான நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு இடம் என்பதையும் பாரபட்சத்தை அரங்கேற்றும் வெட்கக்கேடான ஒரு தளம் என்றும் அவர் தனது தொகுதி மக்களுக்கு தெரிவித்துள்ளார்.”
வில்சன்-ரெய்போல்ட் அவர்கள் நீதி அமைச்சராக பணியாற்றிய முதல் பழங்குடி வம்சாவழிப் பிரip என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வில்சன்-ரெய்போல்ட் தனது கடிதத்தில் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
“எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காகவோ அல்லது பிற சவால்கள் மற்றும் முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்காகவோ நான் இந்த முடிவை எடுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
வில்சன்-ரெய்போல்ட் அவர்கள் நீதி அமைச்சராக இருந்த காலத்தில், கனடாவின் மொன்றியால் நகரைத் தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான எஸ்.என்.சி-லாவலின் மீது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்வது தொடர்பான விடயத்தில் கனடியப’ பிரதமர் அலுவலகத்துடன் மோத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏனென்றால் மேற்படி பொறியியல் நிறுவனம்; செய்த மோசடிகளை பிரதமர் அலுவலகம் அறிந்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை என்பது “து ட்ஷரூடோ அரசாங்கத்தின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாகும்” என்று அப்போது வில்சன்-ரெய்போல்ட் அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்த்ககது.
எஸ்.என்.சி-லாவலின் விவகாரத்திற்கு இடையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் ஓரு சுயேட்சை வேட்பாளராக தனது தொகுதி;யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது