ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையின் போது இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளதாக ஒன்றாரியோவின் விஞ்ஞானக் கழகம் அறிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு கோவிட் தொற்றுநோய் தொடர்பான இடையூறுகளின் பாதிப்புகள் மிகவும் கடுமையாக இருந்திருக்கவேண்டும் மேலும் இந்த கோடை முடிந்து இலையுதிர்காலத்தில் பாடசாலைகள் வகுப்பறைக் கற்றலுக்கு திரும்பாவிட்டால் இளம் வயதினம் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்றும் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் கோவிட்-19 மனநல ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
எட்டு முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க மனச்சோர்வு அறிகுறிகளுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி இளம் பருவத்தினரிடையே அந்த எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அறியப்படுகின்றது
ஒன்ராறியோ மாகாணத்தில் கோவிட்-19 தொற்றின் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணங்கள் பல உள்ளன. ஆய்வாளர்களின் எச்சரிக்கையுடன், பாடநெறி நடவடிக்கைகள் மற்றும் மனநல உதவிகளை வழங்காமல் பள்ளி கதவுகளைத் திறப்பது பாதிப்பை மாற்ற போதுமானதாக இருக்காது. மேலும் தொற்றை அதிகரிக்கும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தொற்றுநோய்களின் இரண்டாவது அலைக்குப் பின்னர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் மீண்டும் முன்னேற்றம் காணவில்லை என்று ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துவதால், முடிவுகள் கவலை அளிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என்று விஞ்ஞானக் கழகம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, தெற்கு ஒன்ராறியோ மற்றும் டொராண்டோ பெரும்பாகப் பகுதியில் உள்ள குழந்தைகள், குறிப்பாக, நாட்டின் மிகக் கடுமையான தொற்றுநோய்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று விஞ்ஞானக் கழகத்தின் ஆய்வாளர் ஒருவர் கூறினார். பாடசாலைகளை மூடீ வைத்தல் மற்றும் பாடநெறி நடவடிக்கைகளை ரத்து செய்வது ஆகியன இதில் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளை தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணம் உத்தரவிட்டது, இதறகு ஒன்றாரியோ வாழ் பெற்றோரிடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பவே ஒன்ராறியோஅரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்க்கது.