கனடாவின் ரொறன்ரோ மாநகரில் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழ் மக்களுக்கான ஒரு ‘சமூக மையம்’ அமைய வேண்டுமென நீண்டகாலமாக எடுக்கப்பட்டு வந்த முயற்சிகளுக்கு தற்போது சாதகமான தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளமை தமிழ் மக்களுக்கு ‘நாக்கில் தேன் தடவியது” போன்ற ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
தமிழ் மக்களுக்காக அமையப் போகின்ற ‘தமிழர் சமூக மையத்திற்;கு” கனடாவின் மூவ்வகை அரசுகளிடமிருந்து நிதி கிடைப்பது உறுதியாகிவிட்டது என்ற செய்தி தற்போது கசிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவின் மத்திய அரசு, ஒன்றாரியோ மாநில அரசு மற்றும் ரொறன்ரோ மாநகர அரசு ஆகியவையே இந்த ‘தமிழர் சமூக மையத்திற்;கு” தேவையான நிதியை வழங்குவதென உத்தியோகபூர்வமாக முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பெற்றுள்ளது.
இது பற்றி அதிகாரமானபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென்று தெரியவந்துள்ளது.