ஸ்காபுறோ Terry Fox Public School பாடசாலைக்கு 14.3 மில்லியன் டாலர்களை ஒன்றாரியே அரசு ஒதுக்கியது
ஸ்கார்பாரோ-அஜின்கோர்ட் மாகாண சபையின் எம்.பி.பி திரு அரிஸ் பாபிகியனின் வேண்டுகோளிற்கு இணங்க ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் மற்றும் ஸ்கார்பாரோ-அஜின்கோர்ட் கல்வியாளர்களுடன் இணைந்து ஸ்காபுறோவில் அமைந்துள்ள Terry Fox Public School பாடசாலைக்கு 14.3 மில்லியன் டாலர் முதலீட்டு அறிவிப்பை நேற்று அறிவித்தார்.
ஓன்றாரியோ மாகாண கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பின் பிரகாரம் உள்ளூர் பாடசாலைகளை புதிதாகக் கட்டுவதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் ஒன்ராறியோவின் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த நிதி தற்போது பாடசாiலையின் வசதிகளுக்கு மேலதிகமான வசதிகளை மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் வழங்கும் என்றும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் தனது உரையில் “14.3 மில்லியன் டாலர்கள் முதலீடானது ஸ்கார்பாரோ-அஜின்கோர்ட் மாணவர்களுக்கு புதிய, தரமான கற்றல் சூழலையும், புதிய குழந்தை பராமரிப்பு அறைகளையும் வழங்கும். இந்த திட்டம் சிறந்த கற்றல் இடங்களைக் கொண்ட மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் மாகாணத்தின் மூலதன முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Terry Fox Public School பாடசாலைக்கு நிதி வழங்கி அதன் வளங்;களைப் பெருக்குவது என்பது எங்கள் சமூகத்திற்கான ஒரு சிறந்த செய்தி” என்று கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இந்த முதலீடு ஸ்கார்பாரோவின் குழந்தைகளுக்கு அவர்களின் திறனை பூர்த்தி செய்வதற்கும் நமது சமூகத்தின் வெற்றிகரமான மற்றும் உற்பத்தி உறுப்பினர்களாக மாறுவதற்கும் ஒரு சிறந்த கற்றல் அமைப்பையும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த கணிசமான நிதியை அங்கீகரிப்பதன் மூலம் ஸ்கார்பாரோ-அஜின்கோர்ட் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்றமைக்கு அமைச்சருக்கு நன்றி. ”
இந்த நிதி அறிவிப்பானது ஸ்கார்பாரோ-அஜின்கோர்ட் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சினால் விடுக்கப்பெற்ற கடந்த எட்டு மாதங்களில் இரண்டாவது பெரிய அறிவிப்பாகும். கடந்த அக்டோபரில், கல்வி அமைச்சர், ஸ்டீபன் லெஸ், மற்றும் ஸ்கார்பாரோ எம்.பி.பி அரிஸ் பாபிகியன், இணைந்து ஒன்ராறியோ அரசு பாடசாலைகளுக்கு 5.7 மில்லியன் டாலர்களை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 40 புதிய குழந்தை பராமரிப்பு இடங்களை அமைக்க முடிஞயும் என்;றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் தெரிவித்தார்.
Terry Fox Public School பாடசாலைக்கான இன்றைய அறிவிப்பு 276 புதிய தொடக்க மாணவர் இடங்கள், 88 புதிய உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்பு இடங்கள் மற்றும் 5 புதிய குழந்தை பராமரிப்பு அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கும் என்றும் அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவித்தார்.