03-05-1996 வெள்ளிக்கிழமையன்று ஸ்காபுறோ ஶ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்த்தானத்தில் வெளியிடப்பெற்றது
2021 ம் ஆண்டை தனது வெள்ளி விழாவிற்குரியதாக கொண்டாடி வருகின்ற எமது உதயன், கொரோனாத் தொற்றின் சவால்களுக்கு மத்தியிலும் தனது இதழ் வெளியீட்டு பயணத்தை தொடர்ந்து வருகின்றது. அத்துடன் வெள்ளி விழா ஆண்டின் சிறப்பிதழ் ஒன்றை எதிர்வரும் 06-08-2021 வெள்ளிக்கிழமையன்று வெளியிடும் பணிகளில் கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் படைப்பாளிகளோடு சேர்ந்து மூழ்கியிருக்கும் இவ்வேளையில் உங்கள் அபிமான ‘உதயன்’ முதலாவது இதழை மீண்டும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இந்த கன்னியிதழ் 03-05-1996 வெள்ளிக்கிழமையன்று ஸ்காபுறோ ஶ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்த்தானத்தில் வெளியிடப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், 17-05-2021 அன்று வெளிவந்த ‘உதயனின்’ மூன்றாவது இதழின் முன்பக்கத்தையும் இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
அன்று தொடக்கம் இன்றுவைரையும் எமது பயணத்தில் கரங்கோர்த்து நிற்கும் அனைத்து விளம்பரதாரர்கள், படைப்பிலக்கிய வாதிகள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், உதயன் அலுவலகத்தில் கடந்த 25 வருடங்களாகப் பணியாற்றிய அனைத்து உதவும் கரங்களுக்குரிய அன்பர்கள் அனைவருக்கும் எமது இதயன் கனிந்த நன்றி.
– கனடா உதயன் ஆசிரிய பீடம்
uthayannews@yahoo.com