மன்னார் நிருபர்
(10-07-2021)
நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னையின் வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை ( 10.07.2021) காலை 7.15 மணியளவில் வரையறுக்கப்பட்ட பக்தர்களுடன், இடம் பெற்றது.
மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி. அன்ரன் அடிகளார் தலைமையில், நானாட்டான் பங்குத்தந்தை அருட்பணி ஜூட் குரூஸ் அடிகளார் இணைந்து ,திருவிழா திருப்பலியை கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியின் இறுதிதியில் வேண்டுதல் செபமும் அதனைத் தொடர்ந்து திருச்சுரூப ஆசிர்வாதமும் இடம் பெற்றது.