(மன்னார் நிருபர்)
(11-07-2021)
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் மற்றும் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதையம் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9.30 மணியளவில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்றது.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் அடிகார் ஆகியோர் கலந்து கொண்டு இரத்ததான முகாமை ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது அடம்பன் பிரதேச இளைஞர்கள்,மற்றும் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து வைத்தனர்.