வீடுகள் வர்த்தக நிலையங்கள் பலத்த சேதம். இலட்சக் கணக்கான டாலர் மதிப்புள்ள இழப்புக்கள்
கனடாவின் பேரி நகரில் நேற்று வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த கடும் சூறாவளியாகத் தோன்றிய இயற்கையின் கோரத் தாண்டவத்தால் பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன பலத்த சேதத்துள்ளாகியன. அதனால் வீட்டுரிமையாளர்களுக்கும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் இலட்சக் கணக்கான டாலர் மதிப்புள்ள இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இந்த இயற்கையின் தாக்குதல்களால் ஏற்பட்ட ஆபத்தான நிலை காரணமாகவும் காற்றினால் வீசப்பட்ட மரங்கள் மற்றும் இரும்புத் தளபாடங்கள் தாக்கியதில் எட்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் நேற்று பிற்பகல் பாரியின் தெற்கு முனையில் மேற்படி சூறாவளி தாக்கியதில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று சிம்கோ பிராந்திய அவசரகால இயக்குனர் ஜே.சி. கில்பர்ட் கூறினார்.
“நாங்கள் ஒவ்வொரு இடத்தையும் சோதித்தோம் என்றும் தேடுதல் நடவடிக்கைகள் திருப்தி அடையும் வரை நாங்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களிலேயே இருப்போம்” என்றும் கில்பர்ட் கூறினார்.
மேற்படி சூறாவளியாகத் தோன்றிய இயற்கையின் கோரத் தாண்டவத்தின் விபரங்களை அறிய முற்பட்டபோது, சுமார் 50 வீடுகளுக்கு கணிசமான சேதம் இருப்பதாக கில்பர்ட் கூறினார்.
“பல கட்டடங்கள் கூட மிகக் கடுமையான சேதங்களைக் கொண்டுள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
“அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் சரிபார்க்கப்படுவதையும் அவர்களின் பாதுகாப்பும் உடல் நலனும் உறுதி செய்வதற்காக நாங்கள் பொலிஸ் மற்றும் தீயணைப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம. இங்கேயே எமது பணிகள் முடியும் வரை நாம் பாதிக்கப்பட்டவர்களோடு இருப்போம் ”
என்று சிம்கோ பிராந்திய அவசரகால இயக்குனர் ஜே.சி. கில்பர்ட் மேலும் கூறினார். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.