மன்னார் நிருபர்
(17-07-2021)
மன்னாரில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று சனிக்கிழமை(17) காலை 10.30 மணியளவில் மன்னார் அன்னை இல்லத்தில் இடம் பெற்றது.
“ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக்கொண்டாடிக் குதூகலிப்போம்” எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது மாணவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, மாவட்ட அரசாங்க அதிபரினால் மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.