மன்னார் நிருபர்
(18-07-2021)
மன்னார் – நானாட்டன் பிரதேச சபை பிரிவில் உள்ள பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் வீதிகளில் மாடுகள் குடியிருப்பதாகவும் இதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நானாட்டான் பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் நானாட்டான் சுற்று வட்ட பகுதி மற்றும் பிரதான வீதிகளின் கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதால் அதிகளவு விபத்து ஏற்படும் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் ஆனாலும் குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே விரைவில் வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கவனிப்பின்றி நடமாடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நானாட்டன் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.