கனடா உதயன் பத்திரிகை ஏற்பாட்டில் கனடிய வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி மற்றும் பாஸ்கரன் சின்னத்துரை ஆகியோரின் ஆதரவில் நடைபெறுகின்றது
கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மலேசியா தேசத்தில் வாழும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சி-2021 எதிர்வரும் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்றது
கனடா உதயன் பத்திரிகை ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு கனடிய வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி மற்றும் பாஸ்கரன் சின்னத்துரை ஆகியோர் நிதி அன்பளிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களது ஆதரவில் இந்த நிகழ்ச்சியில் நாவன்மை திறனை காட்டவுள்ள மாணவ மணிகளுக்கு சன்மானமும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அவர்கள் இருவரது உரைகளும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
மேற்படி நாவன்மை நிகழ்ச்சியை இரண்டாவது தடவையாக நடத்துவதற்கு பிரபல மலேசியாப் பாடகரும் சமூக சேவையாளருமான ரவாங் ராஜா அவர்கள் முன்னின்று உழைத்து வருகின்றார். அவரோடு இணைந்து மலேசியாவில் ஓய்வுபெற்ற கல்லூரி அதிபராக விளங்கும் இராஜேந்திரம் பெருமாள் அவர்களும் பல விடயங்களைக் கவனித்து வருகின்றார்.
அன்றைய தினம் உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்கு தங்கள் நாவன்மை திறனைக் காட்ட இருப்பவர்கள் செல்வன் ஜெஷ்வின் அசோக் செல்வம், செல்வி த னுஷசியா பார்த்திபன், செல்வி மகேஸ்வரி ஜகஜிவேன்திரம், செல்வி நெரோசா மணியரசு, மற்றும் செல்வி நர்மதா ஶ்ரீ ரகுராம் ஆகியோர் ஆவார். இவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கெடும் வகையில் செயற்பட்டவர்கள் அவர்களது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கலைமதி இரமேஷ் (ஆசிரியை மற்றும் அறிவிப்பாளர்) மற்றும் உகனேசுவரி முத்து (ஆசிரியை மற்றும் அறிவிப்பாளர்) ஆகியோர்.
இவர்கள் அனைவருக்கும் கனடா உதயன் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது
நிகழ்ச்சி நடைபெறும் திகதி 25-07-2021 நேரம் கனடிய நேரம் காலை 7.00 மணி மலேசிய நேரம் இரவு 7.00 மணி. இந்த நேரத்திற்கு ஏற்ப ஏனைய நாடுகளிலும் உள்ள நேரத்தை தயவு செய்து கணிக்கவும்.
Zoom Id : 892 9620 8537
Passcode : JAS6855
இங்ஙனம்
நாகமணி லோகேந்திரலிங்கம்
நிறுவனர், பிரதம ஆசிரியர்
கனடா உதயன் வார இதழ்