சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (ஐக்கிய அமெரிக்கா), இரட்ணம் ஃபவுன்டேசன் (ஐக்கிய இராட்சியம்) என்பன இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் 12 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இப் பாடசாலைகளில் ஒன்றான தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் திறன் வகுப்பறையை திறந்து வைத்தல் நிகழ்வு 19.07.2021 வியாழக்கிழமை அன்று கல்லூரி அதிபர் செ.பத ;மசீலன் தலைமையில் நடைபெற்றது.
அதிபர் உரையாற்றும் பொழுது காலத்தின் தேவை அறிந்து மாணவர்களது கற்றலை வழப்படுத்துவகற்காக இதனை வழங்கி வைத்த இரு அமைப்புக்களையும் பாராட்டுவதாக தெரிவித்தார்.
முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரியின் முன்னாள் அதிபரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சருமான திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் திறந்து வைத்ததுடன் எமது கல்லூரி நவீன தொழிநுட்ப யுகத்திற்கேற்ப கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு புதிய சாதனங்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ் அமைப்புக்களால் கிடைக்கப் பெற்ற இத்திறன் வகுப்பறைகயானது மாணவரது கற்றலை ஊக்குவிக்க உதவும் எனக் குறிப்பிட்டார்.
விசேட விருந்தினராக திரு.தி.பிரபாகரன் (சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன திருகோணமலை மாவட்ட நலன்புரி இணைப்பாளர்) அவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.