யாழ்ப்பாணம் பலாலியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். சின்னத்தம்பி நவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோவிலில் தெய்வமாய் நிறைந்திட்ட பப்பாவே!
நம்ப முடியவில்லை ஓராண்டு கடந்ததை…
அன்பின் சிகரமாய் அரவணைப்பில் அர்த்தமாய் வாழந்த எம் பப்பாவே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை நீங்கள் இல்லாத வெற்றிடத்தை
ஆண்டொன்று கடந்தாலும் பப்பா உங்கள் இன்முகமும்,
புன்சிரிப்பும் எம் மனதை விட்டகலவில்லை பப்பா …
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும், பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உங்களை இழந்து தவிக்கின்றார்கள் தினந்தோறும்..
இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி பேரன்பிற்கு இலக்கணமானவரே!
மணி மகுடம் அணியா ஒரு அரசன் பப்பா நீங்கள்
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் மீண்டும் நீங்கள் எம்மிடத்தில் வர வேண்டும்…
ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு ஒளி தந்த பப்பா,
நீங்கள் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் எங்களின் மனங்களில் என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் பப்பா!
எங்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டி நின்ற பப்பா!
ஏற்றிய எம் மனங்களில் நிறைவீர்..
ஸ்ரீ வரசித்தி விநாயகரின் தாள்களில் அடைந்திடுவீர்…
ஓம் சாந்தி சாந்தி!
என்றும் உங்கள் நினைவுகளுடன் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்
தகவல் :
அன்ன லட்சுமி (மனைவி): (905) 554-3499
யசோ (மகள்): (647) 404-1267