தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபாயவின் பதவிப் பிரமானத்திற்குப் பின்னர் பல ஊடகவியலாளர்கள் அவர் ஒரு ‘ராஜபக்ச’ இராஜ்ஜியத்தை உருவாக்குவதில் முழுக் கவனத்துடன் செயற்படுவார் என்ற குறிப்பிட்டார்கள். ஆனால் பலர் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. கோட்டாபாய தனது ஆட்சிக்காலத்தில் இலங்கையை ஒரு பொன்விளையும் நாடாக மாற்றுவார்கள் என்றெல்லாம் எழுதினார்கள்.
இவ்வாறான பௌத்த சிங்கள மனோபாவத்தைக் கொண்ட அவரது தற்போதைய இனவாதப் போக்கிற்கு மற்றுமொரு உதாரணம் வடக்கின் பிரதம செயலாளர் நியமனம் தான் என்று யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இலங்கையின் வடக்கு மாகாண தனித்துவமாக ஒரு தமிழர்களுக்குரிய மாகாணமாகவே பார்க்கப்படுகின்றது ஆனால் அதன் பிரதம செயலாளராக எஸ்.எம்.சமன்பந்துலசேன என்னும் ஒரு பௌத்த சிங்களவரை நியமித்துள்ளார் கோட்டாபாய.
இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள அவர் இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட அரச அதிபராக பதவி வகித்தார். சமன்பந்துலசேன ஜனாதிபதி கோட்டபாயவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இது வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய அடியாகும்.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக பணிபுரிந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. இந்த நியமனத்தின் மூலம் இலங்கையின் 9 ஆவது மாகாணமாக யாழ்ப்பாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரையே பிரதம செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ள விவகாரம் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் வித்தியாசமாக கண்ணோட்டத்தில் பார்ப்பதாக அறியப்படுகின்றது.