இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள தம்பிலுவில் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கனடா வாழ் சமூகத் தொண்டர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி அன்பளிப்பில் நிவாரண உதவிகள் அண்மையில் வழங்கப்பெற்றன.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்போது கனடாவின் பிரம்டன் மாநகரில் வாழ்ந்து வருபவரும், சில வருடங்களுக்கு முன்னர், பிரம்டன் மாநகரத்தின் நகரபிதாவிடமிருந்து சிறந்த தொண்டுச் சேவைக்கான சிறப்பு விருதைப் பெற்றவருமான மேற்படி விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி அன்பளிப்பில் நிவாரண உதவிகள்
வழங்கப்பெற்றன.
தம்பிலுவில் கிராமத்தில் உள்ள சமூக நேயம் கொண்ட இளைஞர்களின் வேண்டுகோளிற்கிணங்க, விசு கணபதிப்பிள்ளை அவர்கள் தனது சொந்த நிதி யிலிருந்து ஒரு தொகையை அண்மையில் அனுப்பி வைத்தார்.
அவரது நிதி அன்பளிப்பில் கொள்வனவு செய்யப்பெற்ற உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகள் வழங்கப்பெற்றன.
மனித நேயம் கொண்ட விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் இயக்குனர் சபை, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
(படங்கள் மற்றும் செய்தி: சத்தியன்)