மேற்குக் கனடாவில் மூண்டுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். சில உ யிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான இராணுவப்படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உலக காடுகளில் ஒன்பது வீதத்தை கொண்டிருக்கும் கனடாவில் கோடை மாதங்களில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமானது என்றபோதும் இந்த ஆண்டு பருவம் முன்கூட்டியே வந்திருப்பதோடு அதன் தீவிரம் மற்றும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் கனடாவின் மத்திய அரசாங்கமும் பிரிட்டிஸ் கொலம்பியாவின் மாகாண அரசாங்கமும் தடுமாற்றம் அடைந்திருந்தாலும் பல எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். முலம் கனடாவின் தேசிய இராணுவம் அங்கு தீயணைப்பு மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது என தேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
பிரிட்டிஷ் கொலம்பியாவின் எல்லைப் பகுதியில் உள்ள அமெரிக்க மாநிலங்களிலும் காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அது கடுமையாக இருப்பதால், வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். கடனாவில் இவ்வாறான காட்டுத் தீயின் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்க அமெரிக்காவின் கலிபோர்னியா, ஆரெகன், மொண்டானா, நெவாடா ஆகியவற்றில் கடுமையான 80 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.