பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்.
(மன்னார் நிருபர்)
(27-07-2021)
மன்னார் மாவட்டத்தில் மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் நேற்று திங்கட்கிழமை(26) மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 976 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
-அவர் மேலும் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
-மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது மேலும் 17 பேரூக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
-இம் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை 167 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் மொத்தம் 959 தொற்றாளர்களும் , தற்போது வரை 976 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தற்போது வரை 2 ஆயிரத்து 341 பீ.சி.ஆர்.பரிசோதனைகளும், தற்போது வரை 24 ஆயிரத்து 617 பீ.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.