(மன்னார் நிருபர்)
(27-07-2021)
வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவு தினமான தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அலுவலகத்தில் நினைவு கூறப்பட்டது.
– தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெளிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை,தளபதி குட்டிமணி,முன்னணிப் போராளிகளான ஜெகன்,தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கு ம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது கட்சியின் உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.