திருகோணமலை மாவட்டத்தின் அங்குவெளி கிராமத்தில் வாழும் கைலாயமணி என்னும் பெண்மணிக்கு கால்களால் நடக்க முடியாத அளவிற்கு உபாதைகள் இருந்தமையால் அவருக்கு ஒரு சக்கர நாற்காலி தேவைப்படுகின்றது என்பதை அங்கிருந்த சமூக சேவகி திருமதி தர்சி கனடாவின் ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினருக்கு அறியத்தந்தார்.
தொடர்ந்து ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினர் கனடா வர்த்தகப் பிரமுகர் திரு பாஸ்கரன் சின்னத்துரையை இது தொடர்பாக அணுகியபோது அவர் சக்கர நாற்காலி ஒன்றை கொள்வனவு செய்வதற்குரிய பணத்தை தருவதாக வாக்களித்தார்.
பின்னர் சக்கர நா ற்காலி ஒன்றை கொள்வனவு செய்வதற்குரிய பணம் அங்கு அனுப்பப்பெற்று, சில நாட்களுக்கு முன்னர் மேற்படி கைலாயமணி என்னும் பெண்மணிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பெற்றது.
(படம்: அரவிந்தன்- செய்தி:- சத்தியன்)