சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் ‘எழுத்துகள் மகாநாடு 2021’ ஒகஸ்ட் மாதம் 1 ம் திகதி தொடக்கம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. ஒரு மாத காலம் நடைபெறும் இம் மகாநாடு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
எழுத்துகளின் தற்போதைய நடத்தை மற்றும் சிங்கள யுனிகோட் இணைந்த எதிர்காலம் பற்றி உரையாடப்படும். இம்முறை தொனிப்பொருள் பன்மொழி கொண்ட இலங்கை என்பதாகும். ஒகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் எழுத்துகள்மகாநாட்டின் பிரதான பயற்சி பட்டறைகளும் மற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
அதனுடன் இணைந்ததாக ஒகஸ்ட் 01ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை 30 நாட்கள் நடைபெறும் உள் நாட்டவர்கள் வெளிநாட்டவரகள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். இதன் நோக்கம் சிங்கள, தமிழ் எழுத்துக்களின் பன்முகத்தன்மை மற்றும் முக்கியத்துவத்தை ஆக்கப்பூர்வமாக வெளிக்கொணர்வதாகும்.
www.akurucollective.org/akurucon என்னும் இணைய தளமூடாக தகவல்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது