(மன்னார் நிருபர்)
(31-07-2021)
நாடளாவிய ரீதியில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ கும்பங்களை முதன்மைப்படுத்தி ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் இன்று (31) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மத நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் தொடர்பாடலுக்கான நிலையம் (CCT) ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜோன்சன் தலைமையில் உப்புக்குளம் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
உப்புக்குளம் கிழக்கு,மேற்கு பகுதியை சேர்ந்த குறித்த சுமார் 70 குடும்பங்களுக்கு 2000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் உப்புக்குளம் கிராம சேவகர்,தேசிய சமாதானப் பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் மெடோசன் பெரேர,மத தலைவர்கள் ,LIRC அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.