இலங்கை கிரிக்கெட் அணிகளில் கடந்த காலங்களில் புகழ்பெற்ற வீரர்களாக விளங்கிய திஸர பெரேரா, இசுரு உதான, தனுஷ்க குணதிலக்க ஆகியோரோடு இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் உள்ளடங்கலாக நால்வர் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள கிரிக்கெட் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக இலங்கையின் விளையாட்டுத்துறை சார்ந்த சஞ்சிகை ஒன்றில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
மேற்படி இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அமெரிக்க தேசிய அணியில் இணைந்து விளையாடுவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இலங்கை அணியின் ஷெகான் ஜயசூரிய ,அமில அபோன்சோ ஆகியோர் இலங்கைகை கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்துவிட்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அமெரிக்க தேசிய அணியில் இணைவதற்கான முனைப்புகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இப்போது இன்னும் மூன்று வீரர்கள் இந்தப் பட்டியலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
அண்மையில் ஓய்வு பெற்ற அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவை தொடர்ந்து 33 வயதான இசுரு உதான இந்த வாரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு விடை கொடுப்பதற்கான ஓய்வை அறிவித்தார் என்பது இ ங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வீரர்களும் அமெரிக்க தேசிய அணியில் இணைவதற்காகவே முன்னதாகவே ஓய்வை அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது மாத்திரமல்லாமல் இப்போது இலங்கை அணியில் இணைந்து கொண்டிருக்கும் பிரதான பந்துவீச்சாளர் ஒருவரும் தென்னாபிரிக்க தொடருக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்து விட்டு, அமெரிக்காவுக்கு குடிபெயரவிருப்பதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இலங்கையின் பிரபலமான ஆங்கில இதழ் ஒன்று அண்மையில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட தனுஷ்க குணதிலகவும் ஓய்வு பெற்று அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அமெரிக்க அணியில் இணைந்து கொள்ளவிருப்பதாக செய்தியை வெளியிடுட்டது.