‘கனடா உதயன்’ வெள்ளிவிழாச் சிறப்பிதழ் 6ம் திகதி வெள்ளிக்கிழமை நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் அதிக பிரதிகள் அச்சடிக்கப்பெற்று வெளிவருகின்றது.
அச்சுப் பிரதிகளுக்கு, கனடாவின் ரொரன்ரொ மாநகரத்திலும் மொன்றியால் மாநகரிலும் உங்கள் பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள். இணையவழி ஊடாக வாசிப்பதற்கு http://www.uthayannews.ca or http://www.nanban.ca ஆகிய இணையத்தளங்களுக்குச் செல்லவும்.
உலகின் பல நாடுகளிலிருந்து எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அரசியல் ஆய்வாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள் உட்பட பல எழுதிய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.
கனடாவின் பிரதமர், கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்படும் படங்கள் Fake Front and Real Front ஆகிய பக்கங்களின் வடிவமைப்புக்கள் ஆகும்.மேற்படி சிறப்பிதழுக்கு விளம்பரங்களைத் தந்து எமக்கு ஆதரவு வழங்கிய அனைத்து வர்த்தக நண்பர்களுக்கும் எமது நன்றி.
கனடா உதயன் அலுவலகம்- கனடா – uthayannews@yahoo.com