யாழ்ப்பாணம், தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலய பாலர் ஞானோதய சபையில் , மிருதங்க ஆசானாகத் திகழ்ந்த மிருதங்க வித்துவான் க.ப.சின்னராசா யாழ்ப்பாணத்தில் காலமானார் என்று அறிவிக்கப்பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் க. ப. சின்னராசாவிடம் பலர் மிருதங்கம் பயின்றார்கள். அவர்களில் ஆலயத்திற்கு அருகே வசித்த வை. வேனிலானும் மறைந்த சிவஸ்ரீ அகிலேஸ்வரக் குருக்களும் காசிப்பிள்ளையாருடைய மகோற்சவ தினங்களில் நடைபெறும் கலை நிகழ்வுகளுக்கு பக்கவாத்தியமாக அணி செய்வார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமரர் சிவத்திரு. க.ப. சின்னராசா ஆசிரியரின் மாணாக்கர்கள் அனைவருமே குருபக்தி நிறைந்த அன்பானவர்கள். குறிப்பாக அவரது சீடனான பிரம்மஸ்ரீ நா. சிவசுந்தரசர்மா ஐயா அவர்கள் தன் குருவை முன்னிலைப்படுத்தி சித்தன்கேணி ஸ்ரீ மகாகணபதிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தின் போது 108 நந்தி வாத்தியக் கலைஞர்களைக் கொண்டு நாத யக்ஞம் செய்தமை குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.
ஆசிரியரது மறைவு இசையுலகுக்கு பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தவர்கள் மற்றும் மாணவர்கள், இசை ரசிகர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ” இவ்வாறு தெரிவித்துள்ளனர் கனடாவிரல் வாழும் அவரது மாணவர்கள் சிலர்.