இலங்கையில் கடந்த சில வாரங்களாக, கோவிட்-19 உயிரிழப்புக்கள் அதிகரிப்பால் நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறுகின்றது என்றும் ஜனாதிபதி கோட்டாபாய தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில், இலங்கையின் சுகாதார அமைச்சர் மற்றும் இலங்கையின் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா ஆகியோர் உட்பட சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் பங்கெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த சில வாரங்களாக கோவிட்- 19 மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், முக்கியமாக அங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனைக் கருத்திற்கொண்டே இன்றைய கலந்துரையாடல் கூட்டப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.