சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்.
(மன்னார் நிருபர்)
(07-08-2021)
மன்னார் மாவட்டத்தில் கடந்த யூலை மாதம் சினோபாம் முதலாவது தடு ப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை(9) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்ட வர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மற்றும்,பேசாலை சென் மேரிஸ் கல்லூரி ஆகியவற்றிலும், அன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை,மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்கப்படும்.
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திங்கட்கிழமை (9) காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
-அன்றைய தினம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
-எதிர் வரும் செவ்வாய்க்கிழமை (10) மடு ஆலயத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் இரணையிலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலையிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும். என அவர் மேலும் தெரிவித்தார்.