கனடா உதயன் பத்திரிகை தனது 25 ஆண்டு கால ஊடகப் பணியை பூர்த்தி செய்தது தொடர்பாக கடந்த வாரம் வெளியிட்ட அதன் வெள்ளிவிழாச் சிறப்பிதழையும் உதயன் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கத்தையும் கௌரவிக்கும் முகமாக கனடா- ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் தனது அலுவலகத்திற்கு அவரை இன்று அழைத்திருந்தார்.
அங்கு திரு லோகேந்திரலிங்கத்தைப் பாராட்டும் வகையில் ஒன்றாரியோ அரசாங்கம் சார்பான வாழத்துப் பத்திரத்தை வாசித்து அவரிடம் கௌரவித்தார்.
இவ்வேளையில் , அங்கு லோகன் கணபதி அவர்களின் அலுவலக உதவியாளர் சிவா அவர்களும் ஏனைய தொண்டர்களும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
அப்போது அங்கு சிற்றுரையாற்றிய லோகன் கணபதி அவர்கள், கனடா உதயன் பத்திரிகை கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு அடையாளமாகவும் அதேவேளையில் இங்குள்ள வர்த்தக சமூகத்தையும் அரசியல் தலைவர்களையும் சமூகத்தோடு இணைக்கும் அற்புதமான பணியையும் ஆற்றிவருகின்றது என்றும் அதற்காக அதன் பிரதம ஆசிரியர் அவர்களின் தன்னலமற்ற சேவையையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
(படங்கள் மற்றும் செய்தி:- சத்தியன்)