கனடாவில் நான்காவது அலை தொற்று வந்தாலும் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததாக அவரது உதவியாளர்கள் சமூக ஊடகங்களில செய்திகளை எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது. இதேவேளை,
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கத் தயாராகும் நிலையில் உள்ளார் என்றும் இது பற்றிய அறிவிப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்டுகின்றது. இவ்வாறான நிலையில் நான்காவது தொற்றுநோய் அலைக்கு தொடர்பான அச்சுறுத்தல் உள்ள நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது ஏற்தல்ல என்று பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியும் புதிய ஜனநாயகக் கட்சியும் பிடிவாதமாக நிற்கும் நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று பிரதமர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிரதான எதிர்க் கட்சிகள் இரண்டும் பொதுத் தேர்தலை எதிர்க்கும் நிலையில் கனடியப் பிரதமரோ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கனடாவின் புதிய ஆளுனர் நாயகமாகிய மேரி சைமன் அம்மையாரை சந்தித்து பாராளுமன்றத்தைக் கலைககும்; படியான வேண்டுகோளை விடுப்பார் என்;று எதிர்பார்க்கப்படுகிறது,
அவ்வாறு பிரதமரின் வேண்டுகோளை கனடாவின் ஆளுனர் நாயகம் ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் செப்டம்பர் மாதம்,; 20 ம் திகதியன்;று தேர்தலுக்கான திகதியாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இ;வவாறான தேர்தல் அறிவிப்புக்கள் கனடாவில் எதிர்பார்க்கப்படும் நிலையில் கனடாவின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரியான டாக்டர் தெரசா டாம் அம்மையார் எதிர்பார்க்கப்படும் தேர்தல் அறிவிப்பை எவ்வாறு பார்க்கின்றார் என்று இன்று ஒட்டாவாவில் செய்தியாளர்கள் அவரிடம் வினாவிய போது, கோவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு, இந்தியாவில்தான் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது என்றும் கனடாவில் தொற்றுநோயின் நான்காவது அலையை தோற்றுவிக்கும் தன்மை அதிகமாக இருப்பதாகவும், இந்நிலையில் தடுப்பூசி போடும் விகிதங்களை அதிகரிக்க மாகாணங்களின் அரசாங்கங்கள் போராடுவதால் நோயின் தாக்கத்தை தணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 13,000 க்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்றும் பெரும்பாலும் தடுப்பூசி போடாதவர்களையே இந்த புதிய வகை வைரஸ் தொற்றுவதன் காரணமாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
இப்போது கூட்டாட்சி பிரச்சாரத்தை நடத்துவது பாதுகாப்பானதா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது அனைத்து சுகாதார நிறுவனங்களும் அமைப்புகளும் உள்ளூர் பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறிய தாம் அம்மையார் இந்த நேரத்தில் ஒரு தேர்தலை நடத்துவது ஆபத்தானது என்று எதிராக கருத்துச் சொல்வதை தவிர்த்தார் என்;றும் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தாம் அம்மையார் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திணறிய வண்ணம் பதிலளித்ததையும் காணக்கூடியதாக இருந்தது. அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் “கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி என்ற வகையில் நான் ” கனடிய மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்?” எவ்வாறு கனடியர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்த வழிகாட்டுதலை வழங்குவதே தனது வேலை என்று கடும்போக்கில் பதிலளித்ததாகவும் அறியப்படுகின்றது. மேலும் தாம் அம்மையார் தேர்தல் தொடர்பாக குறிப்பிடுகையில், பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஆகியோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டும், முகமூடி அணிந்தும் கைகளை கழுவியும் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்”பிரச்சாரம் செய்யும் எவரும் அந்த சிறந்த நடைமுறைகளைக் கவனிக்க வேண்டும், மேலும் உள்ளூர் பொது சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்பதும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதிகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த வேறுபாட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் ”என்றும் தாம் அம்மையார் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக ஒட்டாவாவில் உள்ள சுகாதார தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தகவல் தருகையில், கனடிய தேர்தல் திணைக்களம் மற்றும் ஒரு தொற்றுநோயின் மத்தியில் தேர்தல்களை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி கனடாவில் உள்ள அனைத்துக் கட்சிகளால் நிறையவே கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக பிரிட்டிஸ் கொலம்பியா, சஸ்கச்சுவான், நியூ பிரன்சுவிக் மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் லாப்ரடோர், ஆகிய மாகாணங்களில் நோய்த் தொற்றுக் காலத்தில் நடத்தப்பெற்ற தேர்தல்கள் கனடியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் எனவே நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் அவ்வாறான சுகாதார ஏற்பாடுகளை அனைவரும் சேர்ந்து செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.