பணக்காரர்களை ‘குறி’ வைத்து சாதாரண கனடியர்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என்கிறது தேசிய புதிய ஜனநாயகக் கட்சி
கனடாவில் அடுத்த பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதில் பணக்காரர்களை குறி வைத்தே தமது கட்சி கொள்கைகளையும் பொருளாதார மற்றம் வரி தொடர்பான திட்டங்களை வகுக்கும் என்றும் அவற்றையே எமது தேர்தல் பிரச்சாரங்களில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் சாதாரண கடியர்களுக்கு தெரிவிப்போம் என்றும் தேசிய மட்டத்திலான என்டிபி என்னும் புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை அடுத்த பொதுத் தேர்தலுக்கு கட்சி தயாராகும் போது, வழமையான பிரச்சார யுக்தியிலிருந்து விலகி சாதாரண மக்களின் நலன் கருதி, மனநல சுகாதார சிகிச்சை, மருத்துவம் மற்றும் அதிக விலையுயர்ந்த திட்டங்களை உள்ளடக்கிய உலகளாவிய சுகாதார சேவையை விரிவுபடுத்தவுள்ளதாகவும் மேற்படி என்டிபி அறிவித்துள்ளது.
மேற்படி விபரங்களை என்டிபி என்னும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சீக்கிய வம்சாவழி கனடிய அரசியல் தலைவருமாகிய ஜக்மீட் சிங் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
குனடாவின் நியுபவுண்ட்லாண்ட்-லாபடோர் மாகாணத்தின் சென் ஜோன்ஸ் நகரத்தில் சாதாரண கனடியர்கள் மத்தியில் அவர் உரையாற்றியோது நேற்று வியாழக்கிழமை இதனை வெளிப்படையாக அறிவித்தார்
ஆவர் அங்கு உரையாற்றுகையில் சுநயனல Ready For Better என்று பெயரிடப்பெற்ற தமது தேர்தல் கொள்கை அறிவிப்பில் சாதாரண கனடியர்களுக்கான பல பயனுள்ள திட்டங்கள் உள்ளடக்கப்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் எமது கட்சி மத்தியில் ஆட்சி பீடம் ஏறினால் உடனடியாகவே சாதாரண கனடியர்கள் அதிக நன்மையை அடைவார்கள் என்றும் ஒட்டாவா பாராளுமன்றத்தின் அதிகாரம் தமது கட்சியிடம் கையளிக்கப்பட்டால், பரந்த அளவிலான கொள்கைகளை உள்ளடக்கியதும் உலகளாவிய மருந்தியல் திட்டத்தை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவழிக்க என்டிபி கட்சி உறுதியளித்துள்ளது, மேலும் என்டிபி அரசாங்கத்தின் முதல் நடவடிக்கையாக சாதாரண கனேடியர்களுக்கும் ஏனையோர்க்கும் பொதுவாக, தனியார் நிறுவனங்களின் காப்புறுதித் திட்டங்களை இரத்து செய்து, பல் மற்றும் மனநல சுகாதார திட்டங்களை செயல்படுத்தும். மூத்தவர்கள் மற்றும் அங்கக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான திட்டத்துடன் “உடனடியாக” தொடங்கி அனைத்து கனேடியர்களுக்கும் என்டிபி கட்சியானது அடிப்படை வாழ்வாதார வருமானத்தை உருவாக்கும். என்று உறுதியளித்துள்ளார்
இவ்வாறான திட்டங்களுக்கு எவ்வாறு உங்கள் அரசாங்கம் நிதியைப் பெற்றுக்கொள்ளும் என்று செய்தியாளர்கள் என்டிபி தலைவரிடம் கேட்டபோது, கனடாவின் பெருநிறுவனங்கள் மற்றும் அதிக வருவாய் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியை அதிகரித்து அதன் மூலம் திறைசேரியில் நிதியை அதிகரித்து மக்களுக்கு பயனுள்ள திட்டங்களின் மூலம் உதவிடலாம் என்றும் மேலும் “பெரும் பணக்காரர்” என்ற வரையறையை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்
அர்ப்பணிப்பின் அடையாளமாக என்டிபி கட்சி நேற்று தெரிவித்த திட்டங்கள் போலவே – 2019 தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சியின் மேடைகளில் தெரிவிக்கப்பட்டது என்றும் இதனால் என்டிபி கட்சியானது தமது தொகுதிகளில் 39 இடங்களில் 15 இடங்களை இழந்தது என்றும் ஆனால் கனேடியர்கள் தங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறேன், என்றும் தெரிவித்தார்