பத்து மாகாணங்களையும் மூன’று பிராந்தியங்களையும் கொண்டு பிரிக்கப்பட்ட கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில், ஆட்சியிலிருந்த லிபரல் அரசை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சிக்கு கனடாவின் பல மாகாணங்களிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் மற்றும் அல்பேர்ட்டா மாகாணப் முதல்வர் ஜெய்சன் கென்னி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை புதிய அரசாங்கத்திற்கும் புதிய முதல்வருக்கும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இச் செய்தி எழுதப்பட்டிருக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவரும் பதிய முதல்வராகப் பதவியேற்கவுள்ளவருமான ரிம் ஹொட்சன் அவர்கள் வெற்றியைக் கொண்டாடும் ;விழாவில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
அவர் தனது உரையில் எமது மாகாணத்தின் அனைத்துப் பிரஜைகளுக்காகவும் நான் முதல்வராகப் பதவியேற்கவுள்ளேன். அவர்கள் எந்த நிறமுடையவர்களாக இருக்கலாம். எந்த தாய் மொழியைப் பேசுகின்றவர்களாக இருக்கலாம். எந்த சமயத்தை பின்பற்றுகின்றவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் எமது நோவா ஸ்கோசியா மாகாணத்தின் மக்களே. எனவே அவர்கள் ;அனைவரதும் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து முதல்வர் பதவியை ஆற்றுவதே எனது பொறுப்பு என்பதை உணர்கின்றேன் என்றார் ரிம் ஹொட்சன்.
இன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் படி கொன்சர்வேர்ட்டிவ் கட்சி 30 ஆசனங்களையும் லிபரல் கட்சி 16 ஆசனங்களையும், என்டிபி என்னும் புதிய ஜனநாயகக் கட்சி எட்டு ஆசனங்களையும் எஞ்சிய ஒரு ஆசனத்தை சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் பெற்றுக்கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த மாகாண அரசொன்றின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கனடிய தேசிய தொலைக்காட்சியான சிபிசி யின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் பொதுத் தேர்தலில் லிபரல் கட்;சியின் பெறப்போகும் ஆசனங்கள் தொடர்பான கணிப்பைக் கூறுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.