கோவிட் தடுப்பூசி பெறத் தவறிய ஒன்றாரியோ மாகாண சபையின் இரண்டு அங்கத்தவர்களுக்கு எதிராக முதல்வர் டக் போர்ட் ‘நடவடிக்கை’ எடுத்த பின்னர் மீண்டும் அவர்களில் ஒருவரை ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ள அனுமதித்துள்ளார் என ‘குயின்பார்க்’ செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது
மேற்படி செய்திக் குறிப்பில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ள தவறியதால் முதல்வர் டக் போர்ட் தனது அங்கத்தவர்கள் குழுவிலிருந்து நீக்கியுள்ளார்.
மற்றொரு எம்.பி.பி,யான ஸ்காபுறோ தெற்கு மாகாண சபை உறுப்பினர் கிறிஸ்டினா தனது மருத்துவரிடம் இருந்து “மருத்துவ விலக்கு” கடிகம் பெற்று அதை குயின்ஸ் பார்க்கில் சமர்ப்பித்ததால் பின்னர் ஆளும் கட்சியின் ஆசனங்களில் அமர அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிரேஸ்ட மாகாண சபை உறுப்பினரான மற்ற எம்பிபி ரிக் நிக்கோல்ஸ் குயின்பார்க் மாகாண சபையில் சுயேட்சைகளுக்குரிய ஆசனத்தில் அமர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
“கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் வகிக்கும் பங்கை தனது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரிப்பது மட்டுமல்லாமல், தங்களையும் தங்கள் சமூகத்தில் உள்ள மக்களையும் பாதுகாக்க தடுப்பூசி போட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு” என முதல்வர் டக் போர்டு நேற்று வியாழக்கிழமை கூறினார்.
“ரிக் நிக்கோல்ஸ் தடுப்பூசியிலிருந்து விலக்குவதற்கான நியாயமான காரணத்தை வழங்கத் தவறிவிட்டார். இதன் விளைவாக, அவர் இனிமேல் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் உறுப்பினராக கணிக்கப்பட மாட்டார். அத்துடன் அவர் அடுத்த தேர்தலில் எமது கட்சி வேட்பாளராக வேட்பாளராக மீண்டும் அனுமதிக்கப்பட மாட்டார், ”என்றும் முதல்வர் டக் போர்ட் அழுத்தமாகத் தெரிவித்தார்.